விழா மேடையில் வைத்து மல்யுத்த வீரரை கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. எம்.பி.

0 3075

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் விழா மேடையில் வைத்து மல்யுத்த வீரரை, பா.ஜ.க. எம்.பி கன்னத்தில் அறையும் வீடியோ இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட கைசர்கஞ்ச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூஷன் சரண் சிங், விழா மேடையில் வைத்து மல்யுத்த வீரரை கன்னத்தில் அறைந்து இரு முறை தாக்கினார்.

போட்டியில் கலந்து கொள்ளும் வயது முடிந்தும் தன்னை விளையாட அனுமதிக்குமாறு வீரர் கேட்டு தொந்தரவு செய்ததாகவும், அதனால் சரண் சிங் அடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments