பிரிட்டனில் ஒரே நாளில் பத்தாயிரத்தைக் கடந்த ஒமிக்ரான் பாதிப்பு

0 1991

பிரிட்டனில் ஒருநாள் ஒமிக்ரான் பாதிப்பு நேற்று பத்தாயிரத்தைக் கடந்துவிட்டது. இதனால் ஐரோப்பிய நாடுகள் கலக்கத்தில் உள்ளன.

மீண்டும் லாக் டவுன் உள்ளிட்ட கெடுபிடிகளை அமல்படுத்த பல ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. பாரிஸ் , பார்சிலோனா போன்ற நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரான்ஸ் ஆஸ்திரியா, போன்ற நாடுகள் ஏற்கனவே பல்வேறு புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

நெதர்லாந்தில் ஜனவரி 14ஆம் தேதி வரை ஊரடங்கை பிரதமர் மார்க் ரூட்டோ அமல்படுத்தி உள்ளார். பாரிசில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.டென்மார்க்கில் திரையரங்குகள் ,நிகழ்ச்சி அரங்குகள் பொழுதுபோக்கு பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.அயர்லாந்தில் இரவு நேர மதுவிடுதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments