திருடன்.. திருடன்.. கன்னத்தில் ஓங்கி அடித்து ஓடிப்பிடித்த நேரடிக்காட்சி..!

0 4998

வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் போட்டோ ஸ்டுடியோவில் புகுந்து இளம்பெண்ணை மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறிக்க முயன்ற போதை திருடனை துரத்திப்பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. திருடனை பிடிக்க கோரிக்கை விடுத்தும் யாரும் பிடிக்காததால், ஓட்டத்தை நிறுத்திவிட்டு அவனே வந்து சிக்கிய சம்பவத்தின் சுவாரஸ்ய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

இந்த காட்சியில் யாரோ இருவர் கண்ணாமூச்சி விளையாட்டு ஆடுகிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள். நிஜமாகவே தப்பிஓடும் திருடனை விரட்டிச்செல்லும் சம்பவத்தின் நேரடி வீடியோ காட்சிதான் இது..!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பேருந்து நிலையத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருப்பவர் சீனிவாசன். இவர் அருகில் உள்ள டீ கடையில் டீ குடிப்பதற்காக அருகில் சென்றதாக கூறப்படுகிறது
கடையில் அனுஷியா என்ற கடைஊழியர் மட்டும் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி கடைக்குள் புகுந்துள்ளான்.

"உங்கள் ஓனர் 500 ரூபாய் பணம் வாங்கிக் கொள்ளுமாறு சொன்னார்" என்று கேட்டுள்ளார். சந்தேகமடைந்த அனுசியா பணத்தை தர மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை மிரட்டிய ஆசாமி கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்
இதைப்பார்த்த அனுசியா கூச்சலிட்டதால் அருகில் இருந்த கடைக்காரர்கள் ஓடி வந்து திருடனை பிடிக்க முயல, எடுத்தேன் பாரு ஓட்டம்... என்று பேருந்து நிலையத்துக்குள் ஓட ஆரம்பித்தான்.

அவனை துரத்திச் சென்ற ஒருவர் திருடன் திருடன் என்று கூறிக்கொண்டே செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டே விரட்டிச்சென்றார். தன்னை துரத்திக் கொண்டு ஒருவர் மட்டுமே வருகிறார் என்பதை கண்டதும் ஓடுவதை நிறுத்திய திருடன் நடக்க ஆரம்பித்தான். இருந்தாலும் திருடனை பிடியுங்கள் என்று விரட்டிச்சென்றவர் கூறிய நிலையில், ஒருவர் கூட அவனைப் பிடிக்கவில்லை.

இதனால் கூடுதல் தெம்புடனும், தெனாவட்டுடனும் விரட்டி வந்தவரை நோக்கி திரும்பினான். யாரை பார்த்து திருடன் என்கிறாய் என்று அவரை அடிக்க முயற்சிக்க, அங்கிருந்த அவரது நண்பர்கள் அந்த போதை திருடனை மடக்கி பிடித்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டனர்.

அடுத்த நொடி அங்கு குடியிருந்த மக்கள் அவனை அடிக்கத் தயாரான போது, கடைசியாக வந்த போலீஸ் ஏட்டு ஒருவர் அவர்களிடம் இருந்து மீட்டு அவனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றார்.

கடையின் உரிமையாளர் சீனிவாசன் காவல் நிலையத்திற்கு சென்று முறையாக புகார் அளிக்கச் சென்ற போது . போதையில் இருந்த திருடனிடம் முகவரி மற்றும் கைபேசி எண் வாங்கிக்கொண்டு போலீசார் அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டது தெரியவந்தது. ((spl gfx out))அதே நேரத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண்ணை மிரட்டி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபரை முழுமையாக விசாரிக்காமல் போலீசார் விடுவித்து அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments