அரிவாள் மணையுடன் பெண் போலீஸை விரட்டிய ஆசாமி.. அப்படியே ஜெயிலுக்கு பார்சல்..!

0 2990

மதுரையில் மனைவியை அடித்து விரட்டிய கணவனை விசாரணைக்கு அழைக்க சென்ற மகளிர் போலீசாரை அரிவாள் மணையால் வெட்டுவதாக கூறி விரட்டிய சம்பவம் அரங்கேறிஉள்ளது. அரிவாள் தூக்கிய அடாவடி ஆசாமி, ஜெயிலுக்கு அனுப்பபட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது.

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் தனது மனைவியை அடித்து விரட்டியதாக எழுந்த புகாரின் பேரில் அதனை விசாரிக்க மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையபோலீசார் பெருமாளின் வீட்டிற்கு சென்றனர்

அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் காவலர்கள் சங்கீதா மற்றும் பொன்னுத்தாயி ஆகிய இருவரும் பெருமாளை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர்

அப்போது பெருமாள் வீட்டிலிருந்த அரிவாள்மணையை எடுத்து கொண்டு வேகமாக வந்த பெருமாள் விசாரணைக்கு சென்ற பெண் காவலர் சங்கீதா மற்றும் பொன்னுதாயி ஆகிய இருவரையும் வெட்டி விடுவதாக கொலை மிரட்டல் விடுத்தது மட்டுமன்றி , 10 வருஷம் ஜெயிலில் பிடிச்சி போட்டுருவியோ என்று அவதூராகவும் பேசினான்

அவனது கையில் அரிவாள்மணை இருப்பதை சற்று தாமதமாக பார்த்த பெண் காவலர் விட்டால் போதும் என்று அங்கிருந்து கிளம்பி செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையே இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் செல்லூர் போலீசார் பெருமஆளை பக்குவமாக பேசி கையோடு காவல் நிலையம் அழைத்துச்சென்று, பெண் போலீசாரை அச்சுறுத்திய பெருமாளுக்கு நாட்டு நிலவரத்தை எடுத்ட்துக்கூறி சிறப்பாக கவனித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

முதலில் மகளிர் போலீசார் விசாரணைக்கு அழைத்த போதே சென்றிருந்தால், வழக்கம் போல கவுன்சிலிங், சமாதானம் என்று பெருமாள் தப்பிக்க சில வாய்ப்புகள் இருந்திருக்கும், அதை விடுத்து பெண் போலீசாரிடம் கெத்து காட்ட நினைத்து ஏட்டிக்கு போட்டியாக கையில் அரிவாள் மனையுடன் வீண் சவடால் விட்டதால் மனைவியின் புகாரோடு சேர்த்து போனஸாக கொலை மிரட்டல் வழக்கிலும் சிக்கி கம்பி எண்ணி வருகின்றது இந்த கருஞ்சிறுத்தை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments