நவீன விவசாய கருவிகளுடன் காட்சிப்படுத்தப்பட்ட விவசாயப் பொருட்கள் கண்காட்சி.. ஆர்வமுடன் பார்வையிட்ட விவசாயிகள்..!

0 2314
நவீன விவசாய கருவிகளுடன் காட்சிப்படுத்தப்பட்ட விவசாயப் பொருட்கள் கண்காட்சி..

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விவசாயப் பொருட்கள் கண்காட்சியில் ஏராளமான நவீன விவசாயக் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

விவசாயம், நெல் மற்றும் பால் பண்ணைகள் சார்பில் நடைபெற்று வரும் இந்த 3 நாள் கண்காட்சி, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பாரம்பரிய நாட்டு ரக காய்கறி விதைகள், பூ வகைகள், பல வகை விதைகள், நாற்றுகள் இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

பால் கறவை எந்திரங்கள், பூச்சி மருந்து தெளிப்பான் கருவிகள், மரம் வெட்டும் எந்திரங்கள், டிராக்டர்கள், கதிரடிக்கும் எந்திரங்கள், களை வெட்டும் கருவிகள், நாற்று நடும் கருவிகள், விதை போடும் கருவிகள் உட்பட ஏராளமான நவீன கருவிகளும் கண்காட்சியில் பங்கேற்றிருந்தன. சனிக்கிழமையன்று நடைபெற்ற கண்காட்சியை தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈரோடு நல்லசாமி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments