போலி வலைதளக் கணக்குகள் மூலம் பெண்களிடம் ஆபாச படங்களைக் காட்டி பணம் பறித்த நபர் கைது

0 2154
போலி வலைதளக் கணக்குகள் மூலம் பெண்களிடம் ஆபாச படங்களைக் காட்டி பணம் பறித்த நபர் கைது

வழுக்கைத் தலையாக இருப்பதால் தன்னிடம் எந்தப் பெண்ணும் பேசவில்லை என்ற ஆதங்கத்தில், அழகான ஆண்களின் புகைப்படத்தை முகப்பில் வைத்து போலி வலைதளக் கணக்குகள் தொடங்கி, பல பெண்களிடம் பழகி, பணம் பறித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான்.

சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகி காதலித்து, ஆபாசப் புகைப்படங்களைக் காட்டி பணம் கேட்டு தன்னை ஒரு நபர் மிரட்டுகிறான் என சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர், போலீசில் புகாரளித்தார்.

விசாரணையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பவன் பிடிபட்டான். தாம் வழுக்கைத் தலையாக இருப்பதால் பெண்கள் எவரும் தன்னிடம் பேசுவதில்லை என்றும் அதனால் போலியான பெயரில், போலி புகைப்படத்துடன் சமூக வலைதலங்களில் கணக்குகள் தொடங்கி, பெண்களிடம் பழகி வந்ததாகவும் மனோஜ் குமார் தெரிவித்துள்ளான்.

தனிமையில் இருக்கும்போது ஆபாசமாகப் பேசுவதையும் ஆபாச படங்கள் அனுப்புவதையும் பதிவு செய்து வைத்துக் கொண்டு பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதையும் மனோஜ்குமார் வழக்கமாக வைத்திருந்தான் என போலீசார் கூறுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments