அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் மிரட்டும் தொனியில் வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்ட இரண்டு இளைஞர்கள் கைது

0 1919
அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் மிரட்டும் தொனியில் வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்ட இரண்டு இளைஞர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் மிரட்டும் தொனியில் வாட்ஸ் அப்பில் வீடியோ பதிவிட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சட்டம் சரியில்லை என்றால் நாங்கள் அரிவாளை கையில் எடுப்போம் என்ற வாசகங்களுடன், அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலானது.

இதையறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அந்த பதிவை வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டதன் பேரில், சுரேஷ் மற்றும் அய்யப்ப நயினார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments