கரூரில் அரசுப் பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி துவக்கம்.!

0 1927

தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பழமையான சேதமடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேதமான வகுப்பறையை இடிக்கும் பணியை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்த அறிக்கையில் அரசுப்பள்ளிகளில் அதிகாரிகள் நேரில் சென்று கட்டிடங்கள், கழிப்பறை சுவர்கள் ஸ்திரத்தன்மையுடன் உள்ளனவா என ஆய்வு செய்து இடிந்து விழும் தருவாயில் உள்ள கட்டிடங்களை மாணவ மாணவிகளுக்கு பாதிப்புகள் ஏற்படா வண்ணம் இடிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் உள்ளது தெரிந்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments