திருவண்ணாமலையில் திமுக உறுப்பினர் வீட்டை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக கூறப்படும் சம்பவம்.. போலீசார் விசாரணை.!

0 2111

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே நள்ளிரவில் திமுக உறுப்பினர் வீட்டை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தளவநாயக்கன் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார், நேற்று இரவு தனது குடும்பத்துடன் மேல்மருவத்தூர் கோவிலுக்கு கிளம்பியுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் அவரது வீட்டின் வெளிப்புற ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக விஜயகுமாருக்கு தகவல் அளிக்க, கோவிலுக்கு செல்லாமலேயே வீடு திரும்பிய விஜயகுமார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இச்சம்பவத்தில், வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.

முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments