திருப்பூரில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டு வந்த பொதுசுத்திகரிப்பு நிலையத்தை மூடிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.!

0 1747

திருப்பூரில் விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டு வந்த பொதுசுத்திகரிப்பு நிலையம் சென்னை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின் பேரில் மூடப்பட்டது. 

முதலிபாளையம் சாலையில் உள்ள  இந்த நிலையத்தில் திடக்கழிவு மற்றும் உப்பு போன்றவை திறந்தவெளியிலேயே கொட்டப்பட்டு கிடந்துள்ளன. சாம்பல் கழிவும் அதிகளவில் இருந்துள்ளது.

3 முறைக்கு மேல் நோட்டீஸ் அனுப்பியும் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ளாததையடுத்து, அந்த நிலையம் மூடப்பட்டுள்ளது.  சுத்திகரிப்பு நிலையத்தின் கீழ் இயங்கிய 21 சாய ஆலைகளின் செயல்பாடும் முடங்கியது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments