ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தீவிரம்... 6 தனிப்படைகள் அமைப்பு..

0 2907
பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே 3 தனிப்படை அமைத்து அவரை தேடி வந்த நிலையில், தற்போது மேலும் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அவர் பெங்களூருவில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஒரு தனிப்படை பெங்களூரு செல்லும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments