வடமாநிலக் கொள்ளையர்கள் கைவரிசையா.? துப்பாக்கிச் சூடு நடத்தி 25 சவரன் நகை, ரூ.60 ஆயிரம் திருட்டு.. போலீசார் தீவிர விசாரணை

0 2984

ராணிப்பேட்டை மாவட்டம் அவினாசிகண்டிகையில் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த வீட்டில் வசித்த 3 பெண்கள் உள்பட 4 பேரை துப்பாக்கியால் சுட்டு நகை, பணம் கொள்ளையடித்து சென்றவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வந்த கணக்காளர் புஷ்கரன், அவரது தாய், பெரியம்மா, பாட்டி ஆகியோரை 3 பேர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மர்ம நபர்கள் இந்தி, ஆங்கில மொழிகளில் பேசியதாக கிடைத்த தகவலை அடுத்து வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையாக என விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments