தமிழக காவல்துறைக்கென்று பிரத்யேகமாக குற்றவாளிகளை முகம் வைத்து அடையாளம் காட்டும் செயலி உருவாக்கம்

0 5424

தமிழக காவல்துறைக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட, குற்றவாளிகளை முகம் வைத்து அடையாளம் காட்டும் செயலியை பயன்படுத்துவதில், சென்னை புறநகர் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கொரட்டுர் மேம்பாலப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், நள்ளிரவில் அவ்வழியே வந்த நபரை பிடித்து பிரத்யேக செயலி மூலம் ஆய்வு செய்ததில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளி வினோத் என்பதும், இவன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து, கரூர் மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments