சென்னை, காஞ்சிபுரம் மின்சார ரயில்கள் காலதாமதம்.. பாலூரில் பயணிகள் ரயில் மறியல் போராட்டம்

0 4559

சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வழியாக அரக்கோணம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தினம்தோறும் காலதாமதமாக வருவதை கண்டித்து, பாலூர் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ஐந்து இரயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, கால தாமதமாக புறப்பட்டு சென்றது. தொடர்ந்து ரயில்வே துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, நடைபெற்று வந்த ரயில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments