இளம்பெண்ணை வெட்டிய 5 பேர் கொண்ட கும்பல் கைது

0 5338
இளம்பெண்ணை வெட்டிய 5 பேர் கொண்ட கும்பல் கைது

இளம்பெண்ணை வெட்டிவிட்டு தப்பிய 5 பேர் கொண்ட கும்பலை, சென்னை பெரியமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்ட்ரல் பகுதியில் வசித்து வரும் டம்மு பிரியா என்பவர், கடந்த 14-ம் தேதி இரவு கண்ணப்பர் திடல் அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ரவுடி கீதன், தனது மனைவியை தவறான பாதைக்கு அழைத்து சென்றது யார், என கேட்டு அவரை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டம்மு பிரியாவை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், திருவல்லிக்கேணியை சேர்ந்த ரவுடி கீதன் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments