இலவச பட்டா மனை வேண்டி மனு கொடுத்தவரிடம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

இலவச பட்டா மனை வேண்டி மனு கொடுத்தவரிடம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இலவச பட்டா மனை வேண்டி மனு கொடுத்தவரிடம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
கண்ணாகுடி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் மலர்கொடி என்பவர், இலவச பட்டா மனை வழங்க அவ்வூரைச் சேர்ந்த பெரியசாமியிடம் 2000 ரூபாயை லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பெரியசாமி லஞ்ச ஓழிப்பு துறையினரிடம் புகாரளித்துள்ளார்.
தொடர்ந்து, அவர்கள் வழங்கிய ரசாயனம் தடவிய நோட்டை, பெரியசாமி லஞ்சமாக கொடுத்தபோது, மறைந்திருந்த அதிகாரிகள் மலர்க்கொடியை கையும் களவுமாக கைது செய்தனர்.
Comments