திடீரென வலிப்பு வந்த போதும் பேருந்தை சாமர்த்தியமாக ஓரங்கட்டிய ஓட்டுநர்..

0 2857
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்ற அரசு விரைவு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டபோதிலும், சாமர்த்தியமாக பேருந்தை ஓரங்கட்டி பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்ற அரசு விரைவு பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டபோதிலும், சாமர்த்தியமாக பேருந்தை ஓரங்கட்டி பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தார்.

31 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி வந்த பேருந்தை ஹேமநாதன் என்பவர் ஓட்டிவந்தவர். பேருந்தானது திருத்தணி பை-பாஸ் ரவுண்டானா அருகே வந்துகொண்டிருந்த போது, ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் சாலையோரமாக நின்ற வாகனங்கள் மீது மோதியவாறே பேருந்தை ஒரங்கட்டி நிறுத்தினார். இதன்பின்னர், பயணிகளின் முயற்சியால் வலிப்பு வந்த ஓட்டுநர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments