உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் - இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் உறுதி

0 6852
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் - இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் உறுதி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு 2 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன. ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும், லக்ஷ்யா சென்னும் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். ஸ்பெயினில் நடைபெற்ற காலிறுதி சுற்று போட்டியில் நெதர்லாந்து வீரர் Mark Caljouw-வை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், 21-8, 21-7 என்ற நேர் செட் கணக்கிலேயே வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இதேபோல் மற்றொரு காலிறுதி போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென் சீனாவின் Jun Peng Zhao -வை 21-15, 15-21,22-20 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் இருவருக்கும் வெண்கலப்பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி சிந்து, உலகின் நம்பர் 1 வீராங்கனை தாய்-சூ-இங்கிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments