சென்னையில் மாடுகளை பொது வெளியில் விடவும், சாலைகளில் வளர்க்கவும் அனுமதி இல்லை - மாநகராட்சி

0 8718
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளை பொது வெளியில் விடவும், பராமரிப்பின்றி சாலைகளில் வளர்க்கவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளை பொது வெளியில் விடவும், பராமரிப்பின்றி சாலைகளில் வளர்க்கவும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதையொட்டி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் பகுதியில், உத்தரவை மீறி பராமரிப்பின்றி விடப்பட்ட 14 மாடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் தொழுவத்திற்கு எடுத்து சென்றனர்.

பிடிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் 1500 ரூபாய் அபராத தொகை செலுத்தி மாடுகளை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக பிடிக்கப்பட்ட மாடுகளின் காதுகளில் எண்கள் பொறிக்கப்பட்ட batch அணிவிக்கப்படும் எனவும் தொடர்ந்து ஒரே மாடு மீண்டும் பிடிக்கப்பட்டால், அவை "ப்ளூ கிராஸ்" வசம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments