தூய்மையான நகரங்கள்... அனைத்து மேயர்களுக்கும் பிரதமர் வலியுறுத்தல்

0 2052
அனைத்திந்திய மேயர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மேயர்களும் தங்கள் நகரத்தை தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டு வர முயற்சிகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அனைத்திந்திய மேயர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அனைத்து மேயர்களும் தங்கள் நகரத்தை தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்துக்குக் கொண்டு வர முயற்சிகளை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் அனைத்திந்திய மேயர்கள் மாநாடு நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநகராட்சி மேயர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்துக் காணொலியில் உரையாற்றினார்.

காசியில் நடைபெறும் இந்த மாநாடு இந்திய நகரங்களின் வளர்ச்சியில் மிக முதன்மையானது என்றும், காசியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்ற நகரங்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும் என்றும் தெரிவித்தார்.

உள்ளூர்த் திறன்கள் மற்றும் தயாரிப்புகள் ஒரு நகரத்தின் அடையாளமாக எப்படி இருக்கும் என்பதைக் காசி போன்ற நகரிலிருந்து அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

இந்தியாவுக்குப் புரட்சி தேவையில்லை என்றும், நமது பாரம்பரியக் கட்டடங்களை இடிக்கத் தேவையில்லை என்றும், தேவைப்பட்டால் அவற்றைப் புதுப்பித்துக் கட்டிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments