தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இறக்க நேரிடும் - ஜோ பைடன் எச்சரிக்கை

0 2866
அமெரிக்காவில் பனிக்காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகவும் இறக்கவும் நேரிடும் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் பனிக்காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகவும் இறக்கவும் நேரிடும் என அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதுடன் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. மேலும் தினசரி பலி எண்ணிக்கையும் 1300-ஐ கடந்து வருகிறது.

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோ பைடன், பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி மூலம் ஒமிக்ரான் பரவல் மோசமடையாமல் நாடு நல்ல நிலையில் இருப்பதாக கூறினார்.

மேலும் தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அமெரிக்கர்கள் நோய் தொற்று மற்றும் உயிரிழப்பு குறித்து கவலையடைய தேவையில்லை எனவும் பைடன் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments