உணவுப் பொருளின் தரக் குறைபாடு, கலப்படம் குறித்து தெரிவிக்க, புகார் எண்களை உணவகங்களில் ஒட்ட வேண்டும் - உயர்நீதிமன்றம்

0 2633

உணவுப் பொருட்களின் தரக் குறைபாடு, கலப்படம் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக, அந்தந்த மளிகைக் கடைகள், உணவகங்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் புகார் எண்களை ஒட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், உணவு கலப்படம் தொடர்பாக மாதிரிகள் சேகரித்து, ஆய்வு நடத்தினால் மட்டும் போதாது என்றும், கலப்படத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உணவு கலப்படத்தை தடுக்க தனி துறை அமைக்கப்பட்டுள்ள போதும், கலப்படம் என்பது தற்போது அதிகளவில் இருப்பதாக கூறிய நீதிபதி, மக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments