தமிழகத்தில் 28 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று அறிகுறி - அமைச்சர் மா.சுப்ரமணியன்

0 4920

தமிழகத்தில் மேலும் 28 பேருக்கு ஒமிக்ரான் வகை தொற்று அறிகுறிகள் இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி சேவைகளை குறுஞ்செய்தி மூலம் நினைவூட்டும் திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர், அவர் இத்தகவலை தெரிவித்தார்.

மேலும், ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவருடன் தொடர்புடைய 278 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருகவதாகவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்தவும் அனுமதி கோரி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments