உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி செய்த கார் ஓட்டுனர் பிரபுவை, நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு

பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் சமத்துவபுரம் கிராமத்தில் நாய்கள் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை, மூச்சை கொடுத்து காப்பாற்றிய கார் ஓட்டுனர் பிரபுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திற்கு வரவழைத்து பாராட்டினார்.
4-க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்ததில் அடிபட்டு உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி செய்த பிரபுவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து பலதரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
Comments