பூடான் நாட்டின் மிக உயரிய விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிப்பு

0 3043

பூடான் நாட்டின் மிக உயரிய குடிமை விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பூடான் நாட்டின் தேசிய நாளை ஒட்டி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு ''நகடக் பெல் ஜி கொர்லோ''  என்கிற பூடான் நாட்டின் மிக உயரிய விருதை அளிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது.

இதைப் பகிர்ந்துகொண்ட அந்நாட்டு பிரதமர் மோடியின் பெயர் இந்த விருதிற்கு தேர்வானது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். பல ஆண்டுகளாக பிரதமர் மோடி பூடானுடன் நட்புறவை பேணி வருவதாகவும், கொரோனா போன்ற இக்கட்டான காலத்தில் பூடானுக்கு ஆதரவாக மோடி உதவியதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments