மகாராஷ்டிரத்தின் ஜெய்தாப்பூரில் 6 அணு உலைகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

0 2847

மகாராஷ்டிரத்தின் ஜெய்தாப்பூரில் மொத்தம் 9900 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைக்கக் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், ரத்தினகிரி மாவட்டத்தின் ஜெய்தாப்பூரில் பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் ஒவ்வொன்றும் 1650 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட ஆறு அணு உலைகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்காக பிரான்ஸ் நாட்டின் இடிஎப் நிறுவனத்துடன் தொழில்நுட்ப, வணிக அடிப்படையிலான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments