ஜப்பானில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாப பலி

0 2239

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் எட்டு மாடிகள் உள்ள கட்டடத்தின் 4 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டு தீ வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்து குறித்து தகவல் அளிக்கபட்டு அரை மணி நேரத்திற்குள் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீ ஏற்பட்ட 4 ஆவது மாடியில் இருந்தும் கட்டடத்தின் மேல் பகுதியிலிருந்து கரும் புகை வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments