ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் மனுத் தள்ளுபடி

0 2129

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில், முன் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆவின் உள்ளிட்ட துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 3கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவினர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரது உதவியாளர் பலராமன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி மனுதாக்கல் செய்திருந்த நிலையில், விசாரணையில், மோசடி குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கூறி முன் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments