குடிபோதையில் ஹோட்டலுக்குள் அமர்ந்து ஆபாசமாக பேசிய நபர்கள், தட்டிக் கேட்ட ஹோட்டல் உரிமையாளருக்கு அடி, உதை

0 2014

சென்னை பெரியமேட்டில் குடிபோதையில் ஹோட்டலுக்கு சாப்பிட சென்று, சக வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவு விளைவிக்கும் வகையில் ஆபாசமாக பேசியதோடு, ஹோட்டல் உரிமையாளரை சரமாரியாக தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரியமேடு தர்பார் சின்கல் அருகேயுள்ள ஜாய் ஹோட்டலிலுக்கு நேற்றிரவு உணவருந்த சென்ற மர்ம நபர்கள் 3 பேர், மதுபோதையில் அவர்களுக்குள்ளே ஆபாசமாக பேசியுள்ளனர்.

சக வாடிக்கையாளர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் ஆபாசமாக பேசக்கூடாது என ஹோட்டல் உரிமையாளர் தேவராஜ் கண்டித்திருக்கிறார். இதனை ஏற்றுக் கொள்ளாமல் தேவராஜையும் ஆபாசமாக பேசத் தொடங்கிய அவர்கள் அவரை சரமாரியாக கற்களாலும், கீழே தள்ளிவிட்டும் தாக்கினர்.

சம்பவத்தை பார்த்த ரோந்து போலீசார் மூன்று பேரையும் பிடித்து பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments