இருசக்கர வாகனத்தில் வைத்து இருந்த ரூ.1 லட்சம் கொள்ளை.. சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

0 1528

நாமக்கல்லில், இருசக்கர வாகனத்தில் வைத்து இருந்த 1 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேல் ஈச்சவாரி பகுதியை சேர்ந்த சிங்கண்ணன் என்பவர் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள வங்கியில் நேற்று 1 லட்சம் எடுத்து கொண்டு, ஒரு மஞ்சள் பையில் ஸ்கூட்டரில் வைத்து விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார்.

இந்நிலையில், 1லட்சம் பணத்தை, தனது இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, அருகில் உள்ள மருந்து கடைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, சிங்கண்ணன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments