மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய தந்தை மற்றும் மகளை வழிமறித்து கத்தியால் வெட்டிய மர்மநபர்கள்.. 3 பேரை கைது செய்த போலீசார்

0 2206

திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூரில், தந்தை மற்றும் மகளை கத்தியால் வெட்டி தப்பி சென்ற சம்பவத்தில், சிசிடிவி காட்சிகள் மூலம் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வழுதலம்பேடு பகுதியை சேர்ந்த ரஜினிகாந்த், கடந்த சில வாரங்களுக்கு முன்பு டியூசன் முடித்த தனது மகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டிற்கு சென்ற போது, வழிமறித்த மர்மநபர்கள், தந்தையின் முன் மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், தட்டிக் கேட்டதால் இருவரையும் ஆத்திரத்தில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினுராஜ், குன்றத்தூர் பரத், ராஜசேகரன் என்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments