செல்போனை பறித்து பெண்ணை தரதரவென இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்...

0 2296

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் பெண்ணிடம் மொபைல் போனை பறித்த கொள்ளையர்கள் போனை விடாமல் போராடிய அந்தப் பெண்ணை ஸ்கூட்டியில் 150 அடி தூரம் வரை தரதரவென இழுத்துச் சென்று சாலையில் தூக்கியெறிந்து தப்பி விட்ட கேமரா பதிவுகள் வைரலாகி உள்ளன.

மயங்கி விழுந்த பெண்ணை நோக்கி சாலையில் சென்றவர்கள் ஓடிச் செல்வதும் அந்தக் காட்சியில் பதிவாகி உள்ளது. சிறிது நேரம் போக்குவரத்தும் இதனால் தடை பட்டது. போலீசார் கேமரா காட்சிகளைக் கைப்பற்றி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments