தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மதுபான ஆலை ஓட்டுநர்-சாவில் மர்மம் இருப்பதாக உடலை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்காத உறவினர்கள்

0 2354
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மதுபான ஆலை ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதில் மர்மம் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே மதுபான ஆலை ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதில் மர்மம் இருப்பதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மட்டங்கால் ஊரைச்சேர்ந்த சரண்ராஜ் என்பவர், பணியாளர்களை கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் மதுபான ஆலையில் இறக்கிவிட்ட பின்னர், வாகனம் நிறுத்தும் இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து, உடலை கைப்பற்றிய காவல்துறையினர், கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி, உடலை பிரேத பரிசோதனை செய்யவிடாத உறவினர்கள், சுமார் 200க்கும் மேற்பட்ட ஊர்மக்களுடன் சேர்ந்து மட்டங்காலில் உள்ள பட்டுக்கோட்டை-கந்தர்வக்கோட்டை சாலையில் நான்கு மணிநேரமாக மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments