சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நடுவே திடீரென தோன்றிய பள்ளம் ; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
தேசிய நெடுஞ்சாலை நடுவே திடீரென தோன்றிய பள்ளம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நடுவே திடீரென 5 அடிக்கும் அதிக ஆழமான பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே ஏற்பட்ட இந்த பள்ளம் தொடர்பாக வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் உடனடியாக அங்கு சென்ற நெடுஞ்சாலை துறையினர் அதனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து வாகனங்களை வேறு வழியில் செல்லுமாறும அறிவுறுத்தினர்.
Comments