பத்திரப்பதிவுத் துறை முறைகேடு - சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0 2173

பத்திரப்பதிவுத் துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், ஆள் மாறாட்டம், போலி ஆவணப் பதிவுகள், அரசு நிலங்கள், நீர்நிலை புறம்போக்குகள் பற்றியும், அறநிலையத்துறை, வக்பு வாரியத்துக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக நடந்த முறைகேடான ஆவணப் பதிவுகள் குறித்தும் புலனாய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அயல் நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் அசையா சொத்தின் உண்மையான உரிமையாளர்கள், அபகரிக்கப்பட்ட சொத்து பற்றியும் புலனாய்வுக் குழு ஆய்வு செய்து 3 மாதத்திற்கு ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments