இயற்கையை சார்ந்து இருக்கும் வகையில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் ; பிரதமர் மோடி

0 2701
இயற்கையை சார்ந்து இருக்கும் வகையில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்

விதை முதல் மண் வரை அனைத்தையும் இயற்கையை சார்ந்து இருக்கும் வகையில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிக்கனமான பாசன முறைகளையும் விவசாயிகள் கையாள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் நடைபெற்ற இயற்கை வேளாண்மை தொடர்பான மூன்று நாட்கள் தேசிய கருத்தங்கத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர் இதனை கூறினார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விவசாயம் குறித்து திருவள்ளுவர் பாடல் இயற்றி இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இயற்கை விவசாயம், விவசாயிகளுக்கு நீண்ட கால பலன்களை அளிக்கும் என்றார்.

ரசாயன உரங்களால் பசுமை புரட்சி ஏற்பட்டது என்றாலும் கூட, வெளிநாடுகளில் இருந்தே உரங்களுக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியது உள்ளது என்றார். SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments