பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த 'ராய்' சூறாவளி.. 1 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..!

0 1980

பிலிப்பைன்ஸ் நாட்டை சக்திவாய்ந்த ராய் (Rai) சூறாவளி தாக்கியுள்ள நிலையில், சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

தெற்கு பிலிப்பைன்ஸின் Surigao del Norte மாகாணத்தை தாக்கிய சூறாவளியால் மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் மார்பளவு வரையில், வெள்ள நீர் தேங்கியுள்ளது.

சூறாவளி காரணமாக தெற்கு பிலிப்பைன்ஸில் சாலை, படகு, ரயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடங்கி இதுவரை பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள 15-ஆவது புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரீத்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments