ஆதார் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2.25 லட்சம் கோடி சேமிப்பு ; இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் தகவல்

0 2475
ஆதார் மூலம் மத்திய அரசுக்கு ரூ.2.25 லட்சம் கோடி சேமிப்பு

ஆதார் மூலம் பயனாளிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசின் மானியம் நேரடியாக சென்றடைவதால், 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு சேமிக்க முடிந்துள்ளது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சவுரப் கார்க் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், மத்திய அரசின் 300 திட்டங்களும், மாநில அரசுகளின் 400 திட்டங்களும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆதார் அட்டையில் எளிதாக திருத்தங்கள் மேற்கொள்ள, செல்போன் செயலியை உருவாக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஆதார் தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன என்றும் சவுரப் கார்க் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments