சிறிய செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டை 2022 முதல் காலாண்டில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்

0 2660
சிறிய செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டை 2022 முதல் காலாண்டில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

சிறிய செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட்டை 2022 முதல் காலாண்டில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இவ்வகை ராக்கெட்டைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இதற்காக 169 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இவ்வகை ராக்கெட்டுகள் 500 கிலோ எடையைச் சுமந்து கொண்டு சென்று 500 கிலோமீட்டர் தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிறுத்தும் திறன் பெற்றவையாகும்.

நான்கு நாடுகளின் செயற்கைக் கோள்களை இந்த ராக்கெட்கள் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ உடன்பாடு செய்துள்ளதால், அதன்மூலம் 1130 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments