ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம்-சிங்க முகமூடியுடன் கொள்ளையன் உலாவிய சிசிடிவி காட்சி

0 5014

வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்தவனின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

5 தளங்களுடன் இயங்கி வரும் நகைக்கடையில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 15 கிலோ 800 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் சிங்க முகமூடி போட்டுக் கொண்டு கடைக்குள் உலாவிக் கொண்டிருந்த கொள்ளையன், சிசிடிவி கேமரா மீது Foam Spray அடித்த காட்சி வெளியாகியுள்ளது.

கொள்ளையர்களை பிடிக்க 4 டி.எஸ்.பிகள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாக வடக்கு மண்டல காவல் துறையின் துணை தலைவர் சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments