தற்காலிகமாக பணியாற்ற 61 உதவிப் பேராசிரியர்கள் தேவை ; சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

0 1799
தற்காலிகமாக பணியாற்ற 61 உதவிப் பேராசிரியர்கள் தேவை

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ், தற்காலிகமாக பணியாற்ற உதவிப் பேராசிரியர்கள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில், பல்வேறு துறைகளின் கீழ் தற்காலிகமாக முழு நேரமாக பணியாற்ற 61 உதவிப் பேராசிரியர்கள் தேவை எனவும், மாத சம்பளம் 30,000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், NET / SLET / SET அல்லது Ph.D., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் www.ide.unom.ac.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.ஜனவரி 5ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments