சுமார் 14 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள கிண்டி கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

0 2107

சென்னை கிண்டி மேம்பாலத்தின் கீழ் சுமார் 14கோடியே 50லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக, குளோவர் இலை வடிவமைப்புடன் கூடிய கிண்டி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கைவினைப் பொருட்கள் அங்காடி, உணவுக்கூடம், பசுமைப் பகுதியுடன் கூடிய சிறுவர்களுக்கான விளையாட்டு திடல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பேருந்துகள், கார்கள், இருசக்கரவாகனங்கள் நிறுத்துவதற்கும் தனித்தனியாக இட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, பூங்காவில் உலோகத்தாலான உயிரெழுத்துக்களின் வடிவங்களும் இடம்பெற்றுள்ளன. இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ள இந்த நகர்ப்புற சதுக்கத்தை திறந்து வைத்த முதலமைச்சர், பேட்டரி காரில் பயணம் செய்து சுற்றி பார்த்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments