டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு

0 2363

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தலைநகரில் மொத்த பாதிப்பு 10ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஒமைக்ரான் உறுதியானவர்கள் நலமுடன் உள்ளதாகவும், அவர்களில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒமைக்ரான் தொற்று அறிகுறியுடன் டெல்லியில் 40 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், மகாராஷ்டிராவில் 32 பேர், ராஜஸ்தானில் 17 பேர் என நாட்டின் மொத்த ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு 77ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments