ஹெலிகாப்டர் விபத்து.. விமானி வருண் சிங்கின் உடலுக்கு விமானப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை.!

0 2944

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்து பெங்களூர் மருத்துவமனையில் உயிரிழந்த விமானி வருண் சிங்கின் உடலுக்கு விமானப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், விமானி வருண் சிங் மட்டும் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் தப்பினார்.

பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். ஏலகங்காவில் வைக்கப்பட்ட அவர் உடலுக்கு விமானப்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். வருண் சிங்கின் உடல் போபாலுக்குக் கொண்டுசெல்லப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடத்தப்பட உள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments