11 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது

0 2797

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, 11 ஆம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

அரசு பள்ளி ஒன்றில் கடந்த 8 ஆண்டுகளாக வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்த டானிங்டன் பகுதியை சேர்ந்த 46 வயது முரளிதரன் என்பவன் மாணவிகளிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும், மாணவிகளை தவறான முறையில் தொடுவதும் என பாலியல் சேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இது குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.  இதனையடுத்து தலைமை ஆசிரியர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில் வரலாற்று ஆசிரியர் முரளிதரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments