ஆந்திராவில் பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து...
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பயணிகளுடன் சென்ற தனியார் சொகுசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத்தில் இருந்து சீராலாவுக்கு சென்ற தனியார் சொகுசு பேருந்து, திம்மராஜுபாளையம் அருகே சென்ற போது, எஞ்சின் பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது. தீப்பற்றியதை உடனடியாக கவனித்த ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி, பயணிகளையும் கீழே இறங்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார்.
பயணிகள் அனைவரும் உடனடியாக ஜன்னல் வழியாகவும், கதவு வழியாகவும் வெளியேறிய நிலையில், மளமளவென பற்றிய தீ பேருந்து முழுவதும் பற்றி எரிந்தது. தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக் கூடு போல் ஆனது.
Comments