முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் எம்.எம்.நரவானே

0 5089

முப்படைகளின் தலைமை தளபதிகள் குழுவின் தலைவராக, ராணுவத் தலைமை தளபதி எம்.எம்.நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 8-ம் தேதி குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமைப் தளபதியாக இருந்த பிபின் ராவத் உட்பட 13 உயிரிழந்தனர். இந்நிலையில், ராணுவத் தலைமைத் தளபதியாக உள்ள நரவானேவுக்கு இப்புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக பிபின் ராவத் வகித்த முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்படுவதற்கு முன்பு, முப்படைகளின் தளபதிகளில் மூத்தவர், முப்படைகளின் தலைமை தளபதிகள் குழுவின் தலைவராக நியமிப்பது வழக்கம்.

சமீபத்தில் விமானப்படை தலைமைத் தளபதியாக வி.ஆர். செளதரியும், கடற்படை தலைமைப் தளபதியாக ஆர்.ஹரிகுமாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். முப்படைகளின் தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில், எம்.எம்.நரவானே இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, பிபின் ராவத்துக்கு அடுத்து, முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி இவருக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments