கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்க தீயணைப்பு துறையின் உதவியை நாடிய சான்டா கிளாஸ்

0 1780

பெரு நாட்டில் கோவிட் காரணத்தால் உயரமான கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குழந்தைகளுக்கு தீயணைப்புத் துறையின் உதவி மூலம் பரிசுப் பொருட்களை கிறிஸ்துமஸ் தாத்தா வழங்கினார்.

தலைநகர் லிமாவில் உள்ள Pan American விளையாட்டு போட்டிகளுக்காக கட்டப்பட்ட  Pan American வில்லேஜ் கட்டடத்தில் பல குடும்பங்கள் கோவிட் காரணத்தால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதில் உள்ள சுமார் 120 குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீயணைப்பு லாரியின் கிரேன் மூலம் மேலே சென்று ஜன்னல் வழியாக பரிசுகளை சான்டா கிளாஸ் வழங்கி குழந்தைகளை மகிழ்வித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments