சென்னை கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் பூங்கா, முதலமைச்சர் இன்று திறப்பு

0 1754

சென்னை கிண்டி - கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் 14 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கத்திப்பாரா நகர்புற சதுக்கம் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

5 புள்ளி 38 லட்சம் சதுர அடி பரப்பளவில் கடந்த 2018ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட கத்திப்பாரா நகர்புற சதுக்கம் முழு வடிவம் பெற்று திறக்க தயாராக உள்ளது.

சிறுவர்களை கவரும் விதமாக பூங்காவை சுற்றியுள்ள மேம்பால சுவர்களில் வண்ண வண்ண கார்டூன் ஓவியங்கள், தமிழ் எழுத்துகள் வைக்கப்பட்டுள்ளன.

ஒரே நேரத்தில் 25 பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த இடம் அமைக்கப்பட்டுள்ளன.

பூங்காவை சுற்றிலும் 27 வகையிலான ஏழாயிரத்து 69 செடிகள் நடப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

திறந்த வெளி உணவகங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், நவீன கழிவறைகள், மழைநீர் புகா வண்ணம் இரு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments