புதுக்கோட்டையில் தனியார் மதுபான ஆலையில் ஒப்பந்த ஓட்டுநர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை.!

0 2023

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அடுத்த மட்டாங்கால் கிராமத்தில் தனியார் மதுபான ஆலையில் தூக்கிட்ட நிலையில் இருந்த ஓருவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தனியார் மதுபான ஆலையில் ஒப்பந்த ஓட்டுநர் பணியில் உள்ள சரண்ராஜ் என்பவர் ஆலை வளாத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்ட நிலையில் தொங்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த போலீசார் சரண்ராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

முன்னதாக சரண்ராஜின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் ஆலை நிர்வாகம் குறித்து போலீசார் முறையாக விசாரிக்க வேண்டுமென உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments